தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜிநாமா

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாடை சந்தித்த முதல்வர் எடியூரப்பா தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

News image

எடியூரப்பா(கோப்புப்படம்)

Updated On :26 ஜூலை 2021, 7:15 am

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாடை சந்தித்த முதல்வர் எடியூரப்பா தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

2019-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நான்காவது முறையாக எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. இன்றுடன் (ஜூலை 26) முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எடியூரப்பா, 3-ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு, விதான சௌதாவில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில் பேசிய எடியூரப்பா, இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாக எடியூரப்பா அறிவித்தார்.

இதையடுத்து, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாடை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

பாஜகவில் 75 வயதைக் கடந்தவா்கள் முக்கிய பதவிகளில் இருந்து விலகியிருக்கும் விதிமுறை உள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை, பலர் எதிர்த்து வந்தனர். 

இதையடுத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சித் தலைவர் நட்டா உள்ளிட்டோரை கடந்த வாரம் தில்லியில் சந்தித்து பேசிய எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.