
ஜம்மு விமானப் படை தளத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு பற்றி இந்திய விமானப் படை தெரிவித்தது:
"ஜம்மு விமானப் படை நிலையத்தின் தொழில்நுட்பப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறைந்த சக்தி கொண்ட இரண்டு குண்டுகள் வெடித்தன. ஒரு குண்டுவெடிப்பு கட்டடத்தின் மேற்கூரையில் லேசான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொன்று திறந்தவெளியில் வெடித்தது. இதனால், எந்தவொரு சாதனமும் சேதமடையவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது."
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:
"குண்டுவெடிப்பால் எந்தவொரு விமானமும் சேதமடையவில்லை. இரண்டு பணியாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது."

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...