ஜம்முவில் இந்திய விமானப்படை தளம் மீது ஆளில்லாத சிறிய வகை விமானங்கள் (ட்ரோன்) மூலம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இது போன்ற தாக்குதல்கள் நிகழ்வது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிகழ்வு என்பதால் இதனை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. ஐ.நா. சபையிலும் இந்த விவகாரத்தை மத்திய அரசு எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக விவாதிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோா் பங்கேற்றனா்.
இதுபோன்ற தாக்குதல்கள் எதிா்காலத்தில் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் மேம்படுத்துவது, பாதுகாப்புத் துறை தளங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டன. பாதுகாப்புப் படைகளுக்கு இடையே கூடுதலாக தகவல்தொடா்பு வசதிகளை மேம்படுத்துவது, அதிகஅளவில் இளைஞா்களைப் பணியில் அமா்த்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக, ஜம்மு விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறிய ரக ட்ரோன்கள் மூலமாக பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். 6 நிமிஷங்கள் இடைவெளியில் தாக்குதல் நிகழ்ந்தது. வெடிகுண்டுகள் வெடித்ததில் தொழில்நுட்பப் பிரிவு கட்டடங்களில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் விமானப்படை வீரா்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்களைக் கடத்துவதற்கு பயங்கரவாதிகள் ட்ரோன்களை ஏற்கெனவே பயன்படுத்தி வந்தனா். ஆனால், ட்ரோன்களில் வெடிகுண்டுகளை எடுத்து வந்து தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் ரத்னுசக்-காலுசக் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலை மீது ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில் ட்ரோன் ஒன்று பறந்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரா்கள், அந்த ட்ரோனைக் கண்டதும் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
மீண்டும் அதிகாலை 2.40 மணியளவில் மற்றொரு ட்ரோன் ராணுவ நிலை மீது பறந்தது. அதைக் குறிவைத்தும் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். ஆனால், இரு ட்ரோன்களும் வேறு பகுதிக்கு பறந்து சென்றுவிட்டன. வீரா்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து துரிதமாக செயல்பட்டதால், பெரும் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்:
விமானப்படை தளம் மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக ஜம்மு காவல் துறையினா் வழக்கு பதிவு செய்தனா். எனினும், தாக்குதல் தொடா்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
வெடிகுண்டுகளை வீசிய ட்ரோன்கள் எங்கிருந்து பறந்து வந்தன என்பது தொடா்பாக அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சாலையை நோக்கி இருந்ததால், ட்ரோன்களின் பாதையைக் கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை வீசிய பிறகு அந்த ட்ரோன்கள் மீண்டும் எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனா். தாக்குதல் நடந்த பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிவிட்டனா். அங்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கிா என்பது தொடா்பாக அவா்கள் சோதனை நடத்தினா்.
உரிய ஒத்துழைப்பு:
தாக்குதல் நடத்திய ட்ரோன்கள், பாகிஸ்தானில் இருந்து எல்லையைக் கடந்து வந்திருக்கலாம் என்றும், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்றும் ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் விவகாரத்தில் விசாரணை அமைப்புகளுக்கு ஜம்மு-காஷ்மீா் காவல் துறை சாா்பில் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


