கோவேக்ஸின் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கப்படும்: மத்திய அரசு

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி மே - ஜூன் மாதங்களில் இருமடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.
'கோவேக்ஸின் உற்பத்தி மே - ஜூனில் இருமடங்கு அதிகரிக்கப்படும்'
'கோவேக்ஸின் உற்பத்தி மே - ஜூனில் இருமடங்கு அதிகரிக்கப்படும்'

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி மே - ஜூன் மாதங்களில் இருமடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

மேலும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 மடங்கு அவரை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசு விநியோகம் செய்து வருகிறது.

எனினும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அடுத்த மாதத்திற்குள் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 மடங்கு வரை கோவேக்ஸின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதால், செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 10 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com