காற்று மாசு: தில்லியில் எவற்றுக்கெல்லாம் தடை?

காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக தில்லியில் நவம்பர் 21ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ளது.
காற்று மாசு
காற்று மாசு

காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக தில்லியில் நவம்பர் 21ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கம், தொழிற்சாலைகள், பயிர்க்கழிவுகள் எரிப்பு காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் இன்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

தில்லியில் நவம்பர் 21ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

  • கட்டுமானப் பணிகள், கல்லூரிகள், பள்ளிகள், நூலகங்கள், பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அரசு அலுவலக பணியாளர்கள் 100 சதவீதம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.
  • அத்தியாவசிய தேவைகள் தவிர பிற வாகனங்கள் தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இதை உறுதி செய்யும்.
  • பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க 1,000 தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு நாளைமுதல் இயக்கப்படும்.
  • 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்கள் சாலைகளில் இயங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கேஸ் மூலமாக மட்டுமே தொழிற்சாலைகள் இயக்கப்பட வேண்டும். எரிவாயு மூலம் இயக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், 372 தண்ணீர் தெளிக்கும் இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com