பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டனர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி


புது தில்லி: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டனர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 
 
மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் சுமாா் ஓராண்டாக விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றபோதிலும், அவற்றில் எந்தவித தீா்வும் எட்டப்படவில்லை.

சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்வந்தபோதிலும், சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென விவசாயிகள் தொடா்ந்து கோரி வந்தனா். இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமா் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள், வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.

நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலேயை  வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பின்னரே போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் அறிவித்தனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 

இதில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடா்ந்து அந்த மசோதாக்கள் குளிா்கால கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படலாம் என தவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com