உ.பி. வன்முறை: நாடு முழுவதும் நாளை(அக்.5) காங். ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை(அக். 5) ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை(அக்.5) காங். ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் நாளை(அக்.5) காங். ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை(அக். 5) ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜிவ் சுக்லா கூறியது:

லக்கீம்பூா் செல்லும் வழியில் சீதாபூரில் பிரியங்கா காந்தி மற்றும் தீபேந்திர ஹூடா சட்ட விரோதமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதில், ஹூடா தாக்கப்பட்டுள்ளார். சுதந்திரமாக செயல்படவிடாமல் அரசியல் தலைவர்களை தடுப்பது அபாயகரமானதாக உள்ளது.

இந்த வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் மற்றும் உ.பி. முதல்வரை வலியுறுத்துகிறோம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

வன்முறைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன்தான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில் அவரின்மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com