
பிரியங்கா காந்தி உண்மையான காங்கிரஸ் தலைவர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.
நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 'பிரியங்கா காந்தி 'ஒரு உண்மையான காங்கிரஸ் தலைவர்' என்பதால் விவசாயிகளை சந்திக்கும் தன்னுடைய முடிவை கைவிடமாட்டார். தடுப்புக் காவலுக்காக அவர் பயப்படவில்லை. சத்தியாகிரகம் நிற்காது' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பிரியங்கா காந்தி இதுகுறித்து, 'நரேந்திர மோடி சார், உங்கள் அரசு எந்த உத்தரவும் எஃப்ஐஆரும் இல்லாமல் கடந்த 28 மணிநேரம் என்னை காவலில் வைத்துள்ளது. ஆனால் விவசாயிகளை நசுக்கிய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை' என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.