இந்தியாவில் கரோனாவால் 4.50 லட்சம் பேர் பலி

இந்தியாவில் கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 4.5 லட்சம் பேர் பலியானதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் கரோனாவால் 4.50 லட்சம் பேர் பலி
இந்தியாவில் கரோனாவால் 4.50 லட்சம் பேர் பலி

இந்தியாவில் கரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 4.5 லட்சம் பேர் பலியானதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

உலகளவில் கரோனாவால் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்  நேற்று(அக்-7) கரோனா தொற்றின் காரணமாக 271 பலியானதைத் தொடர்ந்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 4,50,124- ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் 21,257 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,15,569-ஆக அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 93,17,17,191 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை மட்டும் 50,17,753 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 58,00,43,190 பரிசோதனைகளும், வியாழக்கிழமை மட்டும் 13,85,706 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com