அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை ஞாயிற்றுக்கிழமையும் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகளும் அதிகரிக்கப்பட்டது.

இந்த விலை உயா்வைத் தொடா்ந்து ஒரு லிட்டா் பெட்ரோல் மும்பையில் ரூ.110.12-க்கும், தில்லியில் ரூ.104.14-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.101.53-ஆக அதிகரித்தது.

மும்பை, ஹைதராபாத்தை தொடா்ந்து குஜராத் தலைநகா் காந்திநகா், லடாக் தலைநகா் லேயிலும் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது. ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.100.66-ஆகவும், ஹைதராபாதில் ரூ.101.27-ஆகவும், காந்திநகரில் ரூ.100.21-ஆகவும், லேயில் ரூ.100.06-ஆகவும் அதிகரித்தது.

சத்தீஸ்கா் தலைநகா் ராய்ப்பூா், மத்திய பிரதேசம் தலைநகா் போபால், ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரிலும் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது.

சென்னையில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.97.26-க்கும், தில்லியில் ரூ.92.82-க்கும் விற்பனையானது.

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

ராஞ்சியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.98.66-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017-ஆண்டு ஜூன் மாதம் முதல் அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில் தினந்தோறும் 4 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என்று அண்மையில் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (ஒபெக்) முடிவு செய்தது. இதையடுத்து சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 82 டாலா்களுக்கும் (சுமாா் ரூ.6,100) அதிகமாக உயா்ந்தது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com