புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 226 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 22,844 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று புதன்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 15,823 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,15,743-ஆக உயா்ந்துள்ளது.
தொடர்ந்து 19 ஆவது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
22,844 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,33,42,901 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,07,653-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 226 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,51,189 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளத்தில் தொடர்ந்து பாதிப்பும், பலியும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,823 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 96,43,79,212 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 50,63,845 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 58,63,63,442 பரிசோதனைகளும், செவ்வாய்க்கிழமை மட்டும் 13,25,399 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


