வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாட்டில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு: ஒரே நாளில் 18,641 குணமடைந்தனர்

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 15,786 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 231 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :22 அக்டோபர் 2021, 5:27 am

DIN


புதுதில்லி:  நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 15,786 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 231 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 18,641 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,43,236-ஆக உயா்ந்துள்ளது. 

18,641 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,35,14,449 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,75,745-ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 231 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,53,042 ஆக அதிகரித்துள்ளது.  

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 4 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை மட்டும் 61,27,277 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 59,70,66,481 பரிசோதனைகளும், வியாழக்கிழமை மட்டும் 13,24,263 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.