நெருங்கும் தீபாவளி; ஹரியாணாவில் பட்டாசுகள் வெடிக்க தடை

தீபாவளியன்று நடைபெறும் திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளிக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், தில்லி அருகே அமைந்துள்ள ஹரியாணா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையம் வழியாக பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் ஹரியாணா அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், "பட்டாசுகளை வெடிப்பது பலவீனமான மக்களின் சுவாச ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும், மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோரின் உடல்நிலையை மோசமாக்கும்.

இந்த தடை உத்தரவு, சுற்றுப்புற காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களுக்கும் பொருந்தும். காற்றின் தரம் மிதமாகவும் அதற்கு குறைவாகவும் உள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி அல்லது குருபுரப் போன்ற பிற பண்டிகைகளின்போது பட்டாசுகளைப் வெடிப்பதற்கான நேரம் கண்டிப்பாக இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இருக்க வேண்டும். சாத் பூஜையன்று, காலை 6 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று, நள்ளிரவில், அதாவது நள்ளிரவு 12 மணி முதல், 11:55 மணி முதல் 12:30 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படுகிறது

பட்டாசுகளை பயன்படுத்தவும் வெடிக்கவும் அனுமதிக்கப்படும் பகுதிகளில், சுற்றுச்சூழல் மேல் அதன் தாக்கத்தை குறைக்க மக்கள் குழுக்களாக பட்டாசுகளை வெடிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் ஹரியாணா அரசு சுட்டிகாட்டியுள்ளது. பிவானி, சர்க்கி தாத்ரி, ஃபரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர், நுஹ், பல்வால், பானிபட், ரேவாரி, ரோஹ்தக், சோனிபட் ஆகிய 14 மாவட்டங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், அபாயகரமான காற்று மாசு அளவுகள் காரணமாக, தில்லி அரசு, தேசிய தலைநகரில் பட்டாசுகளை சேமித்து வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com