கர்நாடகம் : 86 மாணவிகளுக்கு கரோனா தொற்று

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியில்  படிக்கும் 86 மாணவிகளுக்கு நேற்று (செப்-2) வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்ட்-23)  அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று கோலார் தங்க வயலில் அமைந்துள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும்  32 மாணவிகளுக்கும் , பெங்களுருவில் உள்ள ஹொமாராவ் நர்சிங் கல்லுரியில் 34 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பின் ஷிமோகாவில் உள்ள இன்னொரு நர்சிங் கல்லூரியிலும் பரிசோதனை செய்தபோது அங்கு 20 மாணவிகளுக்கு தொற்று ஏற்பட்டதை உறுதி செய்திருக்கிறார்கள்.

மேலும் தொற்று பாதித்த 86 பேரில் 40 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com