குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவையில் அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியைக் கடந்த சனிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். அதையடுத்து பாஜகவின் மாநில சட்டப் பேரவைக் குழுத் தலைவராக புதுமுக எம்எல்ஏ பூபேந்திர படேல் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதையும் படிக்க | ஹரியாணாவில் செப்.20 முதல் பள்ளிகள் திறப்பு
மாநிலத்தில் ஆட்சியமைக்குமாறு பூபேந்திர படேலுக்கு ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத் அழைப்பு விடுத்திருந்தாா். இந்நிலையில், மாநில ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அதனைத்தொடர்ந்து புதன்கிழமை அவரது அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படிக்க | பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் மாலை கூடுகிறது
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் 24 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் 21 பேர் முதல்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முன்னாள் அமைச்சர் விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிதின் படேல், பூபேந்திரசின் செளடசாமா, கெளசிக் படேல், பிரதீப்சிங் ஜடேஜா, ஆர்.சி.பால்டு ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களில் 10 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 பேர் உள்ளிட்ட 14 இணையமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
குஜராத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை!

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly




