184 நாள்களுக்குப் பின்.. கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது

நாட்டில் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 184 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3,09,575 ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், ஒரே நாளில் 26,115 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டனர். மேலும் 34,469 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,27,49,574 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.75 சதவிகிதமாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,09,575 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இது 0.92 சதவிகிதம். மார்ச் 2020க்குப் பிறகு தற்போதுதான் நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

நாள்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 1.85 சதவீதமாகவும், வாரந்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 2.08 சதவீதமாகவும் உள்ளது.

தடுப்பூசி:
இதுவரை மொத்தம் 81.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com