மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளரின் போஸ்டரை சுவற்றில் ஒட்டினார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடவுள்ளார்.

இதையடுத்து, பாஜக வேட்பாளர் பிரியங்காவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று வீடுவீடாக சென்று பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது, ஓர் வீட்டின் சுவற்றில் பாஜக வேட்பாளர் பிரியங்காவின் போஸ்டரை மத்திய அமைச்சர் ஓட்டியது அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூரில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

14 நாடுகள் உடன் கைகோக்கும் சௌதி! உருவானது செங்கடல் பாதுகாப்பு கூட்டணி!

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 15 - நேரலை!

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஆதி கும்பேஸ்வரர் யானை!
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



