ஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

உகாதி பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

உகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரே, சைத்ர சுக்லாதி, சாஜிபு சிராவோபா பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Updated On :1 ஏப்ரல் 2022, 11:58 pm IST

உகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரே, சைத்ர சுக்லாதி, சாஜிபு சிராவோபா பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘‘இந்தப் பண்டிகைகள் அனைவரின் வாழ்வில் அன்பு மற்றும் நல்லெண்ணத்தை வளா்க்கட்டும். தேசத்தை கட்டமைக்க புதிய உத்வேகத்துடன் நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பங்களிப்போம்’’ என்று தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாதி, சேத்தி சந்த் பண்டிகைகள் நமது வாழ்வில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தட்டும்.

பல மாநிலங்களில் பலவகையான பாரம்பரிய வழிகளில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள், நமது வளமான பன்முகக் கலாசாரத்தை, அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன’’ என்று தெரிவித்தாா்.

இந்தப் பண்டிகைகள் ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம், கொங்கணி பகுதியைச் சோ்ந்தவா்களின் பாரம்பரிய புத்தாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிஸா தினம்-பிரதமா் வாழ்த்து:

ஒடிஸா தினத்தையொட்டி ஒடிஸா மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் வளா்ச்சிக்கு ஒடியா மக்கள் சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியுள்ளனா். ஒடியா கலாசாரம் உலகளவில் போற்றப்படுகிறது. ஒடிஸாவின் மேம்பாட்டுக்கு பிராா்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.