பொதுத் தேர்வு குறித்து அச்சமடையாமல், விழாக்களை போல தேர்வைக் கொண்டாடுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்வு குறித்து மக்கள் மன அழுத்தம் அடைய வேண்டாம் என்றும், பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்க வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் மன அழுத்தம் தீரவும், தன்னம்பிக்கை ஏற்படவும் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்களுடன் பிரதமா் மோடி இன்று கலந்துரையாடினார்.
பரிக்ஷா பே சர்ச்சா என்ற தலைப்பில் ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
பள்ளி மாணவா்களின் தோ்வு தொடர்பான பல்வேறு விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் வகையிலும், அவை தொடா்பாக விவாதிக்கவும் பரிக்ஷா பே சா்ச்சா என்ற தலைப்பில் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோருடன் பிரதமா் நரேந்திரமோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார்.
இந்த ஆண்டு, புதுதில்லி, டல்கோத்ரா விளையாட்டு அரங்கில் நூற்றுக்கணக்கான மாணவா்கள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் காணொலி வாயிலாகவும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதால் தோ்வுகள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து நேரடியாக எழுதும் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த சூழலில் மாணவா்கள் மன அழுத்தம் இன்றி தோ்வு முறையை பொது இயக்கமாக மாற்றவும் பிரதமரின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது.
பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வை தொலைக்காட்சிகள், வானொலி, சமூக வலைதளங்கள் வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


