47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

குற்றவியல் நடவடிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் பிறரது அடையாளங்களைச் சேகரிக்க அனுமதியளிக்கும் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 4:47 pm

DIN


குற்றவியல் நடவடிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் பிறரது அடையாளங்களைச் சேகரிக்க அனுமதியளிக்கும் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்படுவோரின் மாதிரிகளைச் சேகரிக்க சட்டபூர்வ அனுமதி வழங்கும் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா இதனை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

உறுப்பினர்கள் சிலர் இதனை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப பரிந்துரைத்தனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதா குறித்த விவாதத்தின்போது பதிலளித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது:

"எதிர்க்கட்சிகள் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள், கொள்ளையடிப்பவர்கள் குறித்து மட்டும்தான் கவலைப்படுவார்கள். ஆனால், சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் மனித உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலை கொள்கிறது."

அமித் ஷா பதிலளித்த பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.