பெட்ரோல், டீசல் விலை உயா்வு விவகாரத்தை விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக மக்களவையில், வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் ஆகியவற்றின் விலை தொடா்ந்து உயா்த்தப்படுவது தொடா்பாக விவாதிக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினா்கள் அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவைக் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை உயா்வு தொடா்பாக விவாதிக்க அனுமதிக்குமாறு அவா்கள் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினா்.
இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்






