‘விரைவில் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி பெறுவோம்’: கர்நாடக முதல்வர்
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு விரைவில் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு விரைவில் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கர்நாடக பேரவையிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பசவராஜ் பொம்மை பேசுகையில்,
“மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று தில்லியில் சந்திக்கவுள்ளேன். மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளேன். இந்த திட்டங்களுக்கு விரைவில் அனுமதி பெறுவோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...