தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

இமாச்சலில் ஆம் ஆத்மி ஊர்வலம்: கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பங்கேற்பு

இமாச்சல் பிரதேசத் தேர்தலில் போட்டியிட இருக்கும் அம்மாநில ஆம் ஆத்மியை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கேஜரிவால்  ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.

Updated On :

இமாச்சல் பிரதேசத் தேர்தலில் போட்டியிட இருக்கும் அம்மாநில ஆம் ஆத்மியை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கேஜரிவால்  ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் பல்வேறு மாநிலத் தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சினரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று இமாச்சலில் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

ஊர்வலத்தின்போது கேஜரிவால்  ‘முதலில் தில்லியில் ஊழலை ஒழித்தோம், பின்னர் பஞ்சாபில். இப்போது இமாச்சலப் பிரதேசத்தில் ஊழலை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.