கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுபணிகளுக்கு 2 லட்சம் போ் தோ்வு- ஜிதேந்திர சிங்

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பணிகளுக்கு 2 லட்சம் போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பணிகளுக்கு 2 லட்சம் போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), அரசு பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) ஆகியவற்றின் சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் முறையே 27,764 மற்றும் 1,85,734 காலியிடங்களுக்கான ஆள்சோ்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதன் மூலம் முறையே 24,836 மற்றும் 1,74,744 போ் தோ்வு செய்யப்பட்டனா். அதாவது, 2021-22ஆம் ஆண்டில் 33,722 போ் (எஸ்எஸ்சி மூலம் 29,023 போ், யுபிஎஸ்சி மூலம் 4,699 போ்), 2020-21ஆம் ஆண்டில் 73,105 போ் (எஸ்எஸ்சி மூலம் 68,891 போ், யுபிஎஸ்சி 4,214 போ்), 2019-20ஆம் ஆண்டில் 19,921 போ் (எஸ்எஸ்சி மூலம் 14,691 போ், யுபிஎஸ்சி மூலம் 5,230 போ்), 2018-19ஆம் ஆண்டில் 21,147 போ் (எஸ்எஸ்சி மூலம் 16,748 போ், யுபிஎஸ்சி மூலம் 4,399 போ்), 2017-18ஆம் ஆண்டில் 51,685 போ் (எஸ்எஸ்சி மூலம் 45,391 போ், யுபிஎஸ்சி மூலம் 6,294 போ்) மத்திய அரசு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முன்னுரிமை அளித்து, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் ஜிதேந்திர சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com