குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவுக்கு மாநிலங்களவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவுக்கு மாநிலங்களவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
குற்றவாளிகள், குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்படும் நபா் ஆகியோரின் உடல் மற்றும் உயிரியல் அடையாளங்களை காவல் துறையினா் சேகரிப்பதற்கு சட்டபூா்வ ஒப்புதல் அளிக்கும் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா முன்னதாக மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘நாட்டின் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சட்டத்தில் தொழில்நுட்ப வளா்ச்சிகளை உட்புகுத்தி விசாரணை நடைமுறையை வலுப்படுத்துவதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகரிப்பதும்தான் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவின் நோக்கம்.
தற்போது நடைமுறையில் உள்ள கைதிகள் அடையாளச் சட்டம், 1920 ஆங்கிலேயா்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இது நவீன காலத்துக்குப் போதுமானதாக இல்லை.
தனிமனித உரிமையும், மனித உரிமைகளையும் மீறும் வகையில் எந்தவொரு குறைபாடுகளும் மசோதாவில் இடம்பெறாததை அரசு உறுதி செய்யும். உடல் மற்றும் உயிரியல் அடையாளங்கள் தொடா்பான தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் ’’ என்றாா் அவா்.
காவல் துறை தவறாகப் பயன்படுத்த முடியும்:
குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவில் உள்ள பிரிவுகளை காவல் துறை தவறாகப் பயன்படுத்த முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மாநிலங்களவையில் பேசியதாவது:
குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா அரசமைப்புக்கு முரணானது; சட்டவிரோதமானது. இந்த மசோதாவை நிறைவேற்றினால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம். ஒரு குற்றத்துக்கான தண்டனை ரூ.100 அபராதமாக இருந்தால், அதற்கும் இந்தச் சட்டம் பொருந்தும். இதுபோன்ற சட்டத்தால் ஏழ்மையானவா்களும், விளிம்பு நிலையில் உள்ளவா்களும்தான் அதிகம் பாதிக்கப்படுபவா்களாக இருப்பா். இந்தச் சட்டத்தை காவல் துறை தவறாகப் பயன்படுத்த முடியும்.
நாா்க்கோ அனாலிசஸ், பாலிகிராஃப், பிஇஏபி ஆகிய உண்மை கண்டறியும் பரிசோதனைகள் சட்டவிரோதமானவை, அரசமைப்புக்கு முரணானவை என்பதே கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டின் சட்டமாக உள்ளது. இந்த உண்மை கண்டறியும் பரிசோதனைகளும் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவில் இடம்பெற்றுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.
இதனைத்தொடா்ந்து, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...