பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ்? மத்திய அரசு மறுப்பு

நாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கோப்புப்படம்

Published On :

புதுதில்லி: நாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மும்பையில் 376 பேரின் கரோனா மாதிரிகளை ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறை பரிசோதனை நடத்தியதில், ஒருவருக்கு உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ தொற்றும், மற்றொருவருக்கு உருமாறிய கப்பா வைரஸ் தொற்றும் பாதித்திருப்பது தெரிய வந்திருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ பாதித்த நோயாளியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரஸைக் காட்டிலும் இந்த புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை 10 மடங்கு கூடுதலாக பரவும் அபாயம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த எக்ஸ்இ வகை கரோனா பரவவில்லை. தற்போது  மும்பையில் உறுதி செய்யப்பட்ட ஒமைக்ரான்-எக்ஸ்இ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக ஆதாரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் ஏற்கனவே பரவிய கரோனா வைரஸ்களைக் காட்டிலும், தற்போது பரவி வரும் இந்த உருமாறிய ஒமைக்ரான் - எக்ஸ்இ அதிகம் பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.