ஆறு மாதங்களுக்குள் பட்டம்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு
மாணவா்கள் படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மாணவா்கள் படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகாா்கள் வருகின்றன. இந்த தாமதம், மாணவா்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, மாணவா்கள் படிப்பை முடித்த 180 நாள்களுக்குள், அதாவது 6 மாதங்களுக்குள் பட்டங்களை பல்கலைக்கழகங்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது மானியக்குழுவின் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...