இந்தி கட்டாயமா? அமித்ஷா முடிவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

பள்ளிக் கல்வியில் இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமித்ஷா
அமித்ஷா

பள்ளிக் கல்வியில் இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு வடகிழக்கு மாநிலங்களின் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வடமேற்கு மாநிலங்களின் பள்ளிக்கல்வியில் 10ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே மும்மொழிக் கொள்கை அமலில் இருக்கும் நிலையில் இந்தியை கட்டாயமாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக பேசிய வடகிழக்கு மாணவர் அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா, இந்தியை திணிக்கும் முயற்சியை எதிர்ப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து மேகாலயா காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரவைத் தலைவர் அம்பரீன், “மாணவர்கள் மீது இந்தியைத் திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். எங்கள் மாநிலத்தில் காசி மற்றும் கரோ ஆகிய இரண்டு மொழிகள் முக்கிய மொழியாக உள்ளன. எனவே இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க மாட்டோம் ” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அசாம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com