ஆந்திரத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது ரயில் மோதியதில் 5 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பத்துவா(Batuwa) அருகே திங்கள்கிழமை இரவு குவாஹாட்டி விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றது. இதையடுத்து ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் சில பயணிகள் இறங்கி அதையொட்டியுள்ள மற்றொரு தண்டவாளப் பாதையில் நின்றுள்ளனர்.
அப்போது அந்த பாதையில் வந்த கோனார்க் விரைவு ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீகாகுளம் எஸ்.பி. கூறுகையில், 'குவாஹாட்டி விரைவு வண்டியில் யாரோ ஒருவர் சங்கிலியை இழுத்ததால் ரயில் நின்றது. ஐந்து பேர் இறங்கி தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கோனார்க் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்' என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

