குருகிராம் கோயிலில் பழச்சாறு அருந்திய 25 பேருக்கு மயக்கம்

குருகிராமில் உள்ள ஒரு கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
குருகிராம் கோயிலில் பழச்சாறு அருந்திய 25 பேருக்கு மயக்கம்

குருகிராமில் உள்ள ஒரு கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்தது, 

குருகிராமின், ஃபரூக் நகரில் உள்ள புத்தோ மாதா கோயிலில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கோயிலில் ஒரு நபர் அளித்த பழச்சாற்றைச் சாப்பிட்ட பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பழச்சாற்றை வழங்கிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரூக்நகர் காவல்துறை அதிகாரி சுனில் பெனிவால் கூறினார். 

அடையாளம் தெரியாத நபர் கோயில் வளாகத்தில் பழச்சாறு பிரசாதம் எனக் கூறி அங்கிருந்தோரிடம் பரிமாறிக் கொண்டிருந்ததாக ஒருவர் தெரிவித்தார். 

பிரசாதம் என வழங்கப்பட்ட பழச்சாற்றைக் கொடுத்தவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றது. அடையாளம் தெரியாத அந்த நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com