மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ராஜிநாமா செய்யப்போவதில்லை: கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

நிச்சயமாக என் பதவியை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

News image
ராஜிநாமா செய்யப்போவதில்லை: கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா
Updated On :1 பிப்ரவரி 2024, 8:58 am

DIN


பெங்களூரு: நிச்சயமாக என் பதவியை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

அரசு பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டில் தற்கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் முதல் நபராக அமைச்சர் ஈஸ்வரப்பா சேர்க்கப்பட்ட நிலையில், அவர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தான் பதவி விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கர்நாடக ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் முதல் பெயராக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அமைச்சர் மீது லஞ்சப் புகார் அளித்த பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அது குறித்து அவரது சகோதரர் பிரஷாந்த் பட்டீல் அளித்த புகாரின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடுப்பியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த பிரஷாந்த் பட்டீல், தற்கொலை செய்து கொண்டார். பிரஷாந்த் அளித்திருந்த லஞ்சப் புகாரின் அடிப்படையில், அவரது தற்கொலை வழக்கில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் அமைச்சக ஊழியர்கள் ரமேஷ், பசவராஜ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொதுப் பணித் துறை ஒப்பந்தம் ஒன்றை சந்தோஷ் பட்டீல் மேற்கொண்டிருந்த நிலையில், அதற்கு உரிய தொகையை அமைச்சகம் விடுவிக்காமல் இருந்தது. தொகையை விடுவிக்கக் கோரி சந்தோஷ் பல முறை வலியுறுத்தியும், தொகையை வெளியிட வேண்டும் என்றால் 40 சதவீதம் லஞ்சம் தர வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் கேட்டுள்ளனர்.  

இது குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்த சந்தோஷ் பட்டீல், தற்கொலை செய்து கொண்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.