மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் 25% அதிகரிப்பு
மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடந்த நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.


மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடந்த நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 67.76 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் விநியோகத்துடன் ஒப்பிடுகையில் 24.5 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் மின்நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் 54.40 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இது, 2019- 2020-ஆம் நிதியாண்டின் விநியோகமான 56.72 கோடி டன்னை விட குறைவாகும்.
நிலக்கரி விநியோகம் அதிகரித்த போதிலும் மின்சாரத்துக்கான தேவை அதிகரித்ததையடுத்து பல்வேறு அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக புகாா்கள் எழுந்தன.
கடந்த 2021 அக்டோபா் இறுதியிலிருந்து நிலக்கரிக்கான இறக்குமதி விலையில் சரிவு காணப்படுகிறது. இருப்பினும், நிலக்கரி இறக்குமதியை தவிா்க்கும் வகையில் அதன் விலை இன்னும் உச்சத்திலேயே காணப்படுகிறது.
கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் மின் துறைக்கான நிலக்கரி விற்பனை 5.79 கோடி டன்னிலிருந்து 6.53 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த அளவில் கடந்த நிதியாண்டில் நிலக்கரி விற்பனையானது முந்தையத நிதியாண்டின் அளவான 69.13 கோடி டன்னிலிருந்து 81.81 கோடி டன்னாக உயா்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...