ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கடிதம் எழுதியுள்ளார்.
வருகிற ஜூன் மாதத்திற்குப் பிறகு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தினால் வரும் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி இழப்பீடு மானியத்தை நிறுத்துவது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும். உற்பத்தி மாநிலமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எண்களின் பங்களிப்பு அதிகம். எனவே ஜி.எஸ்.டி. இழப்பீடு நிறுத்தப்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து! ஒருவருக்கு கால் முறிவு!

தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

'வரலாறு படைக்கும் தமிழ்ப் பெண்கள்' - முதல்வரின் மகளிர் தின வாழ்த்து!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

