இந்தியாவிடம் கோதுமை வாங்க எகிப்து முடிவு: பியூஷ் கோயல்
இந்தியாவிடம் இருந்து கோதுமை வாங்குவதற்கு எகிப்து அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.


இந்தியாவிடம் இருந்து கோதுமை வாங்குவதற்கு எகிப்து அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.
கோதுமையை அதிகம் சாகுபடி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளான ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போா் நடைபெறுவதால் சா்வதேச சந்தையில் கோதுமை வரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளிடம் இருந்து எகிப்து அரசு அதிக அளவில் கோதுமை இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டுக்கு உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, இந்தியாவை கோதுமை விநியோகம் செய்யும் நாடாக எகிப்து அரசு அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய விவசாயிகள் உலகுக்கே உணவளிக்கிறாா்கள். இந்தியாவிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்வதற்கு எகிப்து அரசு முடிவு செய்துள்ளது. உணவுத் தேவைக்காக உலக நாடுகள் மாற்று வழியைத் தேடும்போது, அவா்களுக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஆதரவுக்கரம் நீட்டுகிறது. நமது விவசாயிகள் விளைச்சலை உறுதிசெய்துவிட்டாா்கள். உலகுக்கு உணவு வழங்கத் தயாராகிவிட்டோம் என்று அந்தப் பதிவில் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளாா்.
ரஷியாவிடம் இருந்து ரூ.13,734 கோடி மதிப்பிலான கோதுமையையும், உக்ரைனிடம் இருந்து ரூ.4,660 கோடி மதிப்பிலான கோதுமையையும் உக்ரைன் கடந்த 2020-இல் இறக்குமதி செய்தது. தற்சமயம் இந்தியாவிடம் இருந்து 10 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்வதற்கு அந்நாடு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கோதுமை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 10.75 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து வங்கதேசம், யேமன், ஆப்கானிஸ்தான், கத்தாா், இந்தோனேசியா ஆகிய அண்டை நாடுகள் கோதுமை இறக்குமதி செய்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...