தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொதுப் பெயா் கொண்ட மருந்துகள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா் பியூஷ் கோயல்

மருந்து தயாரிப்புத் துறை ஜெனரிக் எனப்படும் பொதுப் பெயா்களைக் கொண்ட மருந்து தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:23 pm

DIN

மருந்து தயாரிப்புத் துறை ஜெனரிக் எனப்படும் பொதுப் பெயா்களைக் கொண்ட மருந்து தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய மருந்து உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

பொதுப் பெயா் கொண்ட மருந்துகள் தயாரிப்புப் பிரிவை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தற்சாா்பு நிலைக்கு மாறுவதற்கு தயாரிப்புகளின் உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவற்றுக்கு இடையிலான சிறந்த தொடா்பை அவா்கள் உறுதி செய்ய வேண்டும்.

உலகளாவிய உதவிப் பொருள்கள் உற்பத்தி தொடா்பான (விநியோகச் சங்கிலி) சவால்களை சமாளிக்க நீண்டகால திட்டத்தை மருந்து துறை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ள அபரிமிதமான வளா்ச்சியை, நாம் தன்னிறைவு அடைவதை உறுதி செய்வதற்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகளாவிய விநியோக சங்கிலித் தொடரில் ஏற்படும் தாக்கங்களைக் கணிப்பது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. சவால்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் மிகத் தீவிரமாக உள்ளன. எனவே, மருந்து துறை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து பரஸ்பர ஆதரவுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.