மூன்றே மாதத்துக்குள்.. முதல் அடியை எடுத்து வைக்கும் ஏர் இந்தியா

கரோனா பொதுமுடக்கத்தின் போது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சம்பள பிடித்தங்களை தளர்த்தும் பணியை ஏர் இந்தியாவை வாங்கியிருக்கும் டாடா குழுமம் தொடங்கியிருக்கிறது.
மூன்றே மாதத்துக்குள்.. முதல் அடியை எடுத்து வைக்கும் ஏர் இந்தியா
மூன்றே மாதத்துக்குள்.. முதல் அடியை எடுத்து வைக்கும் ஏர் இந்தியா


புது தில்லி: கரோனா பொதுமுடக்கத்தின் போது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சம்பள பிடித்தங்களை தளர்த்தும் பணியை ஏர் இந்தியாவை வாங்கியிருக்கும் டாடா குழுமம் தொடங்கியிருக்கிறது.

கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவை வாங்கிய மூன்றே மாதத்துக்குள், ஊழியர்களுக்கான சம்பள பிடித்தங்களை சரி செய்யும் நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கரோனா பேரிடர் காலத்தில் தங்களது நிறுவன ஊழியர்களின் சம்பள பிடித்தங்களில் பகுதியளவு மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் இண்டிகோ, விஸ்தரா உள்ளிட்ட நிறுவனங்களும் தொடங்கியிருக்கின்றன.

கரோனா பேரிடர் காலத்துக்கு முந்தைய நிலையை விமானப் பயணிகள் எண்ணிக்கைத் தொட்டுவிட்டிருக்கும் நிலையில், தங்களது சம்பளப் பிடித்தங்களை திருத்துமாறு அண்மையில் ஏர் இந்தியா விமானிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதை ஏற்று, வரும் மாதங்களில் சம்பளப் பிடித்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஏர் இந்தியா உறுதியளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com