புதுதில்லி: கரோனா தொற்றின் தீவிரத்தின் போது மோடி அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்ததாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உலக அளவிலான கரோனா இறப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.
அதில், மோடி உண்மையைப் பேசவும் இல்லை, மற்றவர்களையும் பேச விடவும் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர்கள் இன்னும் பொய் சொல்கிறார்கள்.

மேலும் "நான் முன்பே கூறியிருந்தேன், கரோனா பாதிப்பில் அரசின் அலட்சியத்தால் இறந்தது 5 லட்சம் அல்ல, 40 லட்சம் இந்தியர்கள் என்று குற்றம்சாட்டியுள்ள ராகுல், உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள் மோடி,’ தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் இதுவரை கரோனாவுக்கு 5,21,751 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


