ஏப்ரல் 21-இல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஏப்ரல் 21-ம் தேதி இந்தியா வருகிறார்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான விரிவான பேச்சுவார்த்தைக்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஏப்ரல் 21-ம் தேதி இந்தியா வருகிறார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள ஆமதாபாத்துக்கு ஏப்ரல் 21-ம் தேதி வருகிறார் போரிஸ் ஜான்சன். பிரிட்டன் பிரதமராக இந்தியாவுக்கு இதுவே அவரது முதல் பயணம். இந்தியா மற்றும் பிரிட்டனிலுள்ள முக்கியத் தொழில் முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன.
இதையும் படிக்க | தில்லி வன்முறை: 14 பேர் கைது
பின்னர் ஏப்ரல் 22-ம் தேதி போரிஸ் ஜான்சன் புதுதில்லி செல்கிறார். அங்கு இந்தியா, பிரிட்டன் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதனிடையே, ஆமதாபாத்தில் அவர் முக்கியத் தொழில்துறையினரையும் சந்திக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...