தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

டேபிள் டென்னிஸ் வீரர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :18 ஏப்ரல் 2022, 9:30 am

DIN

தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் குவகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுடைய கார், ரிபோயி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. 

இந்த சம்பத்தில் தமிழக வீரர் விஷ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த மேலும் 3 வீர‌ர்கள் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தினதயாளன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது, விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சக வீரர்களால் போற்றப்பட்ட விஷ்வா, பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.