இந்தியாவின் 'ஆர்' மதிப்பானது அல்லது கரோனா பரவும் வேகமானது கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக 1.0 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள கணிதவியல் அறிவியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் வெளியாகியிருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 'ஆர்' மதிப்பானது ஏப்ரல் 12-18ம் தேதிகளில் 1.07 ஆக அதிகரித்திருப்பதாகவும் இது 5-11ஆம் தேதிகளில் 0.93 ஆக இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர் சீதாப்ரா சின்ஹா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா பரவும் வேகத்தைக் குறிக்கும் 'ஆர்' மதிப்பு இதற்கு முன்பு கடைசியாக ஒரு புள்ளியை தாண்டியது கடந்த ஜனவரி 16-22ஆம் தேதிகளில்தான்.
இது தில்லியில் கரோனா அதிகரித்திருப்பதால் மட்டுமல்ல, ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களின் எதிரொலியாகவும் உள்ளது என்றும் சின்ஹா கூறியுள்ளார். இவர் நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கியது முதல் 'ஆர்' மதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
நாட்டின் பெரும்பாலான நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை போன்றவற்றிலும் 'ஆர்'மதிப்பானது ஒன்றுக்கு மேல்தான் உள்ளது. குறிப்பாக தில்லி, உத்தரப்பிரதேசத்தில் இது 2.0 ஆக உள்ளது என்கிறார்.
'ஆர்' மதிப்பு என்றால் என்ன?
'ஆர்' என்பது 'ஆர்ஓ' (R0) (ஆர்-நாட்) எனப்படுகிறது. இது ஒரு வைரஸ் இனப்பெருக்கம் செய்யும் காலத்தை குறிக்கிறது.
இந்த 'ஆர்' மதிப்பைக் கொண்டு ஒரு வைரஸ் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது, ஒரு பகுதிக்குள் எத்தனை வேகமாக அது பரவுகிறது, எது மிகவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது.
இந்த 'ஆர்' என்பது ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு கரோனா பரவுகிறது என்பதை குறிப்பதாக அமைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


