ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வடக்கு காஷ்மீரின், பாரமுல்லாவில் உள்ள மால்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, லஷ்கரை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றது. கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


