தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கர்நாடகத்தில் பலத்த பாதுகாப்புடன் பியூசி பொதுத்தேர்வு தொடக்கம்

ஹிஜாப் பிரச்னைகளுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் கர்நாடகத்தில் இரண்டாமாண்டு பியூசி தேர்வுகள் இன்று தொடங்கியது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:31 am

DIN

ஹிஜாப் பிரச்னைகளுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியதையடுத்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 1,076 மையங்களில் 6.84 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வுகள் மே 18ம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஹிஜாப் அணிந்து தேர்வெழுதத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தேர்வு எழுதும் மையங்களுக்குள் நுழையும் முன் முஸ்லிம் மாணவிகள் தான் அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றினர். தேர்வெழுதிய பின்னர் அணிந்து கொள்வதாகக் அவர்கள் தெரிவித்தனர். 

பெங்களூரில் முஸ்லிம் மாணவி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

ஹிஜாப் முக்கியம், அதே போல் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதும் முக்கியம்.எங்களின் எதிர்காலம் தேர்வு முடிவுகளில் தான் உள்ளது என்று முஸ்லிம் மாணவி கூறியுள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை அணியத் தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உறுதி செய்தது.

தேர்வு மையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மையங்களில் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தோ்வு மைய தலைமை மேற்பார்வைாளர் கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளை தடுக்க 3,074 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களைச் சுற்றி நகல் எடுக்கும் மையங்கள் (ஜெராக்ஸ்) அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. 

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு இலவசமாகச் செல்ல மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.