சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

DIN

சென்னை:  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் பரிந்துரைக் கடிதம் வழங்கும் முறையை ரத்து செய்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியாகியுள்ளது.

அதாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு கல்வியாண்டிலும், அதிகபட்சமாக 
10 மாணவர்களுக்கு பரிந்துரை கடிதம் கொடுத்து, மாணவர் சேர்க்கை பெறும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா சங்கதன் சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: எம்.பி. க்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் எந்தவொரு மாணவா் சோ்க்கையும் நடத்தக்கூடாது. மறு அறிவிப்பு வரும் வரை பரிந்துரை அடிப்படையில் சோ்க்கை வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், எம்.பி.க்களின் பரிந்துரை மட்டுமல்லாமல், கல்வித்துறை அமைச்சக ஊழியர்களின் 100 குழந்தைகள் ஒதுக்கீடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கான ஒதுக்கீடு, கேந்திரிய வித்யாலயா பள்ளி முன்னாள் ஊழியர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட பல்வேறு ஒதுக்கீட்டு முறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.