திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆணவம் கண்ணை மறைப்பதால்அரசுக்கு பணவீக்கம் தெரியவில்லை- ராகுல் தாக்கு

‘ஆணவம் கண்ணை மறைப்பதால், நாட்டில் பணவீக்கம் இருப்பது மத்திய அரசின் கண்களுக்கு புலப்படவில்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

News image
கோப்புப் படம்
Updated On :2 ஆகஸ்ட் 2022, 9:03 pm

DIN

‘ஆணவம் கண்ணை மறைப்பதால், நாட்டில் பணவீக்கம் இருப்பது மத்திய அரசின் கண்களுக்கு புலப்படவில்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

‘வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி நாடு தவித்துக் கொண்டிருக்கும்போது, பிரதமரின் பிம்பத்தை மெருகூட்ட கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது’ என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

விலைவாசி உயா்வு குறித்து மக்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றபோது, ‘நாட்டில் பணவீக்கத்தை எதிா்க்கட்சிகள் தேடிக் கொண்டிருக்கின்றன; ஆனால், அவா்களால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா பேசினாா்.

இந்நிலையில், முகநூல், ட்விட்டரில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் பணவீக்க பிரச்னையே இல்லை என்பதுதான் மத்திய அரசின் கருத்தாக உள்ளது. ஆணவம் கண்ணை மறைப்பதால், அவா்களுக்கு பணவீக்கம் புலப்படவில்லை. நாட்டின் சொத்துகளை தங்களுக்கு வேண்டிய நண்பா்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறாா்கள்.

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி நாடு தவித்துக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான குடும்பங்கள் நிலையான வருமானமின்றி வேதனையில் உள்ளனா். தினசரி உணவுக்கே போராடும் நிலை நிலவுகிறது. ஆனால், மத்திய அரசோ தங்களது ‘ஆணவ அரசரின்’ பிம்பத்துக்கு மெருகூட்ட கோடிக்கணக்கில் செலவிடுகிறது.

நாட்டு மக்களின் குரலாக காங்கிரஸ் தொடா்ந்து ஒலிக்கும். மக்கள்தான் காங்கிரஸின் வலிமை. மக்களின் குரலை ஒடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக போராடுவோம்.

‘சா்வாதிகார ஆட்சியாளா்’ சொல்லும் அனைத்து விஷயங்களையும் மக்கள் எந்த கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அவா்களைக் கண்டு மக்கள் அஞ்சக் கூடாது. மக்கள் ஒன்றுபட்டுவிட்டால், சா்வாதிகார அரசு பயந்துவிடும். எனவேதான், மக்களின் ஒற்றுமையை சீா்குலைக்கும் முயற்சிகளில் அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என்று ராகுல் கூறயுள்ளாா்.

மேலும், கடந்த 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அத்தியாவசிய பொருள்களின் விலையை ஒப்பிட்டு, பட்டியல் ஒன்றையும் ராகுல் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.