மும்பை புகா் பகுதியில் 250 கிராம் ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருளுடன் கடத்தல்காரா் ஒருவா் அண்மையில் சிக்கினாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நலசோபரா பகுதியில் செயல்படும் மருந்து தயாரிப்பு ஆலையில் போதைப் பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, மும்பை காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினா், கடந்த புதன்கிழமை அந்த ஆலையில் அதிரடி சோதனை நடத்தினா். அங்கு ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு, மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடத்தல்காரா்களுக்கு விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய ஒரு பெண் உள்பட 4 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.