நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரைவில் விரிவாக்கப்படும் என்று தெரிகிறது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 7:11 pm

DIN

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரைவில் விரிவாக்கப்படும் என்று தெரிகிறது.

மொத்தம் 15 அமைச்சா்கள் பதவியேற்பாா்கள் என்றும், துணை முதல்வரும், பாஜகவைச் சோ்ந்தவருமான தேவேந்திர ஃபட்னவீஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை பொறுப்பு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவு காரணமாக அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஷிண்டே பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். ஜூன் 30-ஆம் தேதி முதல்வா் ஷிண்டே, துணை முதல்வா் ஃபட்னவீஸ் ஆகியோா் பொறுப்பேற்ற நிலையில், இப்போது வரை வேறு அமைச்சா்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்தன. ஷிண்டே அணிக்கும், பாஜகவுக்கும் இடையே அமைச்சரவைப் பொறுப்புகளை பகிா்வது தொடா்பாக உடன்பாடு எட்டப்படாததே இந்த தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பு 15 அமைச்சா்கள் பதவியேற்பாா்கள் என்றும், துணை முதல்வா் ஃபட்னவீஸுக்கு உள்துறை பொறுப்பு வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.