தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம் அவர் இன்று ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவரும் அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலகுவதாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தெரிவித்திருந்தார்.
ராஜகோபால் ரெட்டி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் தெலங்கானாவில் ஆட்சி புரியும் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர்களும் ராஜகோபால் ரெட்டியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், தெலங்கானாவின் தற்போதைய அமைச்சர்கள் சிலர் மாநிலத்திற்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், சந்திரசேகர் ராவை பார்க்க அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி சந்திர சேகர் ராவும் அவரது குடும்பமும் தெலங்கானாவை கொள்ளையடிப்பதாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தெலங்கானாவில் தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி

பழைய கல்லாறு கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

தண்டவாளங்கள் அருகே குப்பை எரிப்பது குற்றம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

