விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு ஆக.22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.  

News image
கோப்புப் படம்.
Updated On :8 ஆகஸ்ட் 2022, 8:53 am

DIN

பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில், சஞ்சய் ரெளத், அவரது குடும்பத்தினா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறையினா் அண்மையில் சோதனை நடத்தினா். 

தொடர்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 8 வரை அமலாக்கத் துறை காவல் விதிக்கப்பட்டது. இந்த காவல் முடிந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ரெளத் இன்று மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டாா். 

அப்போது பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.