
கொச்சி: கேரளம் மாநிலம் கொச்சி அருகே சிறுமியை சிறுநீர் குடிக்க வைத்தும், இரும்பு கம்பியால் தாக்கியும் மனிதாபிமானமற்ற முறையில் பல்வேறு விதத்தில் தொல்லை கொடுத்து வந்த சித்தியை போலீசார் கைது செய்து, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கேரளம் மாநிலம், கொச்சி அருகே பரவூர் பகுதியில் வசிப்பவர் ரம்யா (32). இவர் ரவி என்பவரை திருமணம் செய்தார். ஏற்கனவே ரவிக்கு திருமணமாகி, மனைவி இறந்து விட்டார். அவருக்கு 11 வயதில் மகள் உள்ளாள்.
இதற்கிடையே சித்தி ரம்யா, ரவி மகளிடம் கண்டிப்புடன் நடந்து வந்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பல்வேறு விதத்தில் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், கடந்த 10 நாள்களாக சிறுமியை சிறுநீர் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், சிறுமியை இரும்பு கம்பியால் தாக்குவது, அறையில் அடைத்து வைப்பது போன்ற மனிதாபிமானமற்ற முறையில் பல்வேறு விதத்தில் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் ரம்யா. இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார் ரம்யா.
இந்நிலையில், பள்ளிக்கு வந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை பள்ளி நிர்வாகத்தினர் கவனித்துள்ளனர். இதையடுத்து சிறுமியிடன் விசாரணை செய்ததில் சித்தியிடம் சிறுமி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை எதிர்கொண்டது தெரியவந்ததை அடுத்து பள்ளி நிர்வாகம் சைல்டு லைனில் புகார் அளித்தனர்.
இதயைடுத்து தகவல் அறிந்து வந்த கொச்சி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சித்தி ரம்யா, இரும்பு கம்பியால் தாக்கியும், சிறுநீர் குடிக்க வைத்தும் கொடுமைப்படுத்தியாதாக கூறினாள்.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், சிட்டாட்டுக்கரை ஊராட்சியில் ஆஷா ஊழியரான ரம்யாவை கைது செய்தனர்.
இதனிடையே ரம்யா காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.