நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ரௌடி வீரமணியை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு வெட்டி கொலை செய்தனர்.
நெய்வேலி, வட்டம் 21-இல் வசித்து வந்தவர் ராமசாமி மகன் வீரமணி(43), பிரபல ரௌடி. இவருக்கு மனைவி செல்வி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது நெய்வேலி நகரியம், நெய்வேலி தெர்மல், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி என 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
நெய்வேலி, வட்டம் 30-இல் வீரமணியின் தாய் காளியம்மாள் வீடு உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு கட்டிலில் வீரமணி படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 12 மணி அளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் வீரமணியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். வீரமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது வீரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். போலீசார் வீரமணியின் சடலத்தை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் நெய்வேலியில பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்: க்ருணால் பாண்டியா

அடுத்தடுத்து தலைவர்களை சந்திந்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

நேரில் வந்த முதல்வர் விஜய்! வாசலில் நின்று வரவேற்ற திருமா! | VCK | TVK

பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
